

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த ேகாவில் முகப்பில் காவல் தெய்வங்கள் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கு சென்றனர். அவர்கள் சாமி சிலைகளை உடைத்து உள்ளனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள்சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.