சேலத்தில் அடகு வைத்த 25 பவுன் நகையை திருப்பிக்கேட்ட பெண் மீது தாக்குதல்

சேலத்தில் அடகு வைத்த 25 பவுன் நகையை திருப்பிக்கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
.
.
Published on

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கரும கவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கோமதி (வயது 47).

இவர் சேலம் அஸ்தம்பட்டி மனக்காடு கிழக்கு தெருவைச் சேர்ந்த சிவதாஸ் (58) என்பவருக்கு சொந்தமான  நகை அடமான கடையில் 25 பவுன் தங்க நகைகளை கடந்த 2016-ம் ஆண்டு அடமானம் வைத்துள்ளார்.

சம்பவத்தன்று அதற்கு உண்டான பணத்தை கட்டிவிட்டு நகையை திருப்பி கேட்டபோது தர மறுத்த சிவதாஸ், கோமதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோமதி அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவதாஸை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com