பொன்னம்மாபேட்டையில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது

சேலம் பொன்னம்மாபேட்டையில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது செய்தனர்.
.
.
Published on

சேலம்:

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்வதாக உணவு பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. 

இதையடுத்து உணவு பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சேலம் பறக்கும் படை தாசில்தார் ஆகியோர் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து சோதனை செய்தபோது அவர் வண்டியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. 

அவரிடம் விசாரணை நடத்தியபோது அங்கு உள்ள வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டை 1100 கிலோ ரேசன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதையடுத்து போலீசார் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரித்ததில் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பாண்டியன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (வயது43) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குபதிவு கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com