நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா

அயோத்தியாப்பட்டணத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.
Published on

வாழப்பாடி,

சேலம் அயோத்தியாப்-பட்டணம் பேரூராட்சி ராம்நகர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்-திட்டங்கள் வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, நரிக்-குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. 

வாழப்பாடி தாசில்தார் வரதராஜன், அயோத்தியாப்-பட்டணம் திமுக ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். 

இதில் பேரூராட்சி தலைவர் பாபு, துணைத் தலைவர் செல்வசூர்யா சேதுபதி, செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம், கவுன்சிலர்கள் மணி, திரு-முருகன், பிரேம குமாரி தன-சேகரன் மற்றும் வருவாய்த்-துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com