சேலம் ரெயிலில் கஞ்சா கடத்திய மேலும் ஒரு வாலிபர் கைது

சேலம் ரெயிலில் கஞ்சா கடத்திய மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பிடிப்பட்ட ஒடிசா வாலிபரையும், பறிமுதல் செய்யப்பட்ட  கஞ்சாவையும் படத்தில் காணலாம்.
பிடிப்பட்ட ஒடிசா வாலிபரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் படத்தில் காணலாம்.
Published on

சேலம்,

ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுப்பதற்காக சேலம் ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 , என்ற பெயரில் தனிப்படை அமைத்து ரெயில்களில் தீவிர சோதனை செய்து வரு-கின்றனர். 

இந்த நிலையில் நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளா செல்லும் தன்பாத்-&ஆலப்-புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏட்டு ராமன் தலைமையில் போலீசார் கண்ணன், சென்னகேசவன், சதீஷ்குமார், கவியரசு, சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையானது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தொடங்கி ஒவ்வொரு பெட்டியாக நடந்தது. ரெயில் பொம்மிடி வரும்போது எஸ்&-11 பெட்டியில் சந்தேகப்படும்படி-யான நபர் ஒருவர் இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அவரிடம் இருந்த கைபையை  திறந்து சோதனை செய்ததில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலம், தண்டபாடி, நிலபடா பகுதியைச் சேர்ந்த தாஸ் வடகா (வயது20) என்பதும், இவர் ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்காமல் வந்து, பின்னர் அதற்கான அபராதம் கட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன்பிறகு சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு-வந்தனர்,   அவர்   மீது ரெயில்வே போலீசார் வழக்குப்-பதிவு செய்து விசா-ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com