சேலம் தளவாய்ப்பட்டி ஸ்ரீ மகா வாராகி அம்மன் மகா கும்பாபிஷேக விழா

சேலம் தளவாய்ப்பட்டி ஸ்ரீ மகா வாராகி அம்மன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
சேலம் தளவாய்ப்பட்டி ஸ்ரீ மகா வாராகி அம்மன் மகா கும்பாபிஷேக விழா
Published on

சேலம்:

சேலம் தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

இன்று மாலை 5 மணிக்கு வாராகி அம்மனுக்கு 3-ம் கால பூஜை, யாகசாலை பூைஜகள், ஹோமம், தத்வார்வசனை பூைஜ, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகின்றன.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நலம் காக்கும் நாயகி அன்னை வாராஹிக்கு 4-ம் கால யாகம் ஆரம்பம், காலை 6.30 மணிக்கு யாகசாலை பூைஜகள், 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சிகளும், 7.30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் பூஜை, தீபாராதனை, தசதானம், தரிசனம், மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரேம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com