இளம்பிள்ளை அருகே தறித்தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

தறித்தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீஸ் கைது செய்தனர்.
.
.
Published on

சேலம்:

இளம்பிள்ளை அருகே உள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 30). தறித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராகவேந்திரன் (29) என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாரியம்மன் கோவில் பண்டிகையின் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

நேற்று முன்தினம் கிருஷ்ணசாமி அவருடைய நண்பர்களுடன் தனது வீட்டின் அருகே பேசி கொண்டிருந்தபோது அங்கு அரிவாளுடன் வந்த ராகவேந்திரன் கிருஷ்ணசாமியை தகாத வார்த்தையால் திட்டி முதுகு மற்றும் தலைப்பகுதியில் அரிவாளால் தாக்கினாராம். 

இதில் காயமடைந்த கிருஷ்ணசாமி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் அவர் இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்இன்ஸ்பெக்டர் பெரியசாமி, வழக்குப்பதிவு செய்து ராகவேந்திரனை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com