பொன்னம்மாப்பேட்டையில் தொழிலாளி தற்கொலை

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

சேலம்:

சேலம் பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது43).  தொழிலாளியான இவருக்கு   மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்தநிலையில் செந்தில்குமார் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால்  கணவன்-மனைவிக்கு இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இதனால் மனம் உடைந்த செந்தில்குமார் நேற்று  வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

இதைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com