சேலத்தில் விபத்தில் பெண் பலி

சேலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
.
.
Published on

சேலம்:

 ‌ சேலம் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் மனைவி நாகலட்சுமி (வயது 43). இவர் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்   அவர் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில்   சேர்க்கப்பட்டார். 

இந்த நிலையில் இன்று காலை நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com