வாழப்பாடி வடபத்ர காளியம்மன் கோயில் தோ்த்திருவிழா

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் கோயில் தோ்த்திருவிழா நடைபெற்றது.
.
.
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி, காளியம்மன் நகா், பாப்பான் ஏரிக்கரையில் அமைந்துள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வடபத்ர காளியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசியில் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டு கொரோனா கட்டுப்பாடுகளில் தளா்வு அறிவிக்கப்பட்டதால், காளியம்மன் கோயில் திருவிழா  வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கரகம் எடுத்து சுவாமிக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சிறப்பு பூஜை வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனா். பண மாலை அலங்காரத்தில் மூலவரான காளியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதனைத் தொடா்ந்து, அரண்மனை கிடா பலியிடுதல், ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com