நகர்ப்புற வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

சேலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசிய காட்சி.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசிய காட்சி.
Published on

சேலம்:

சேலம் உள்ளூர் திட்ட குழுமம், மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் சார்பில் புவியியல் தகவலமைப்பு அடிப்படையிலான சேலம் முழுமை திட்டம் குறித்து கருத்து கேட்டல் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் திட்டத்தின் குறிக்கோள்கள், திட்டத்தின் அனுகுமுறை, சேலம் மாவட்டத்தின் சுய விவரம், சேலம் மாவட்டத்தின் வரலாறு, மக்கள் தொகை விவரம், வளர்ச்சி விகிதம், அடர்த்தி மற்றும் மக்கள் தொகை கணிப்பு, உட் கட்டமைப்பு, போக்குவரத்து, தண்ணீர் விநியோகம், கழிவுநீர் மற்றும் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பொருள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  

மேலும், அம்ரூட்யின் திட்டத்தின் முக்கிய நோக்கம், அனைத்து திட்டம் சார்ந்த துறைகளை ஒருங் கிணைத்தல், நகரின் வளர்ச்சிக்கு திட்டமிடும் செயல்முறையில் பொதுமக்களை ஈடுபடுத்துதல், சாதாரன மக்களுக்குள்ள உரிமைகளை நிலைநாட்டுதல், நகர வளர்ச்சிக்கு தொடர்புடைய பரவலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று அதன் அடிப்படையில் எதிர்நோக்கியுள்ள 20 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் திட்டங்களை வகுத்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார். 

 கூட்டத்தில் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்  ராணி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் மணிவாசகம், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கணேஷ்ராம் உள்ளிட்ட  அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com