அன்னதானப்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

அன்னதானப்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணமாக கிடந்தார்
.
.
Published on

சேலம்:

சேலம் அன்னதானப்பட்டி ஆர்ச் அருகே 60 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் இலங்கேஸ்வரன் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

போலீசார் விரைந்துவந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com