விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், விடுமுறை தினமான இன்று, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
.
.
Published on

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், விடுமுறை தினமான இன்று, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் சிறுவர் பூங்காவில் உற்சாகமாய் விளையாடி மகிழ்ந்தனர்.

தற்போது நடக்க உள்ள கோடை விழாவிற்காக அண்ணா பூங்காவில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகை மலர்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகிறது.

இதனை குடும்பத்துடன் ஆங்காங்கே புகைப்படம் எடுத்தும் மலர்களை கண்டு ரசித்தும் உற்சாகமடைகின்றனர். அண்ணா பூங்கா ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் அதிகஅளவில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com