ஆத்தூர் அருகே ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
.
.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடர்ச்சியில் முட்டல், ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது, இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர். 

படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில் பூங்கா,மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.  

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு காரணமாக இந்த நீர்வீழ்ச்சி மற்றும் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நேற்று முதல் ஆனைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆனைவாரி முட்டல் பகுதிக்கு வர தொடங்கினர். 

முட்டல் ஏரியில் படகு சவாரி செய்ய பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். மேலும், அங்குள்ள பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com