மேச்சேரி அருகே செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மேச்சேரி அருகே செம்மண் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
.
.
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேச்சேரியை அடுத்த வெள்ளாறு கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து செம்மண் கடத்தி எடுத்துச் செல்லப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

 இதனை அடுத்து மேச்சேரி வருவாய் ஆய்வாளர் சக்திகுமார் தொப்பூர் சாலையில் எருமப்பட்டி வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டார்.

அப்பொழுது வேகமாக சென்ற லாரி சிறிது தூரம் சென்று நிறுத்தி விட்டு லாரி டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். இதனையடுத்து லாரியை வருவாய் ஆய்வாளர் சக்திகுமார் சோதனையிட்டபோது அதில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

 இதனை தொடர்ந்து அந்த செம்மண் கடத்தி வந்த லாரியை வருவாய் துறையினர் மேட்டூர் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். 

மேலும் லாரி உரிமையாளர் யார்? எங்கிருந்து மணல் கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com