மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார்.
.
.
Published on

சேலம்;

சேலம் கருப்பூர் அருகே உள்ள சின்னகவுண்டனூர் ராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 24). இவரது மனைவி சுகந்தி (22). கணவன்&-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால், சுகந்தி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று மாலை அங்கு சென்ற அஜித் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்-தார், இதில் வாக்குவாதம் ஏற்பட்டு சுகந்தியின் தாயாரும் அஜித்தை திட்டிய-தாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அஜித் வீட்டிற்கு வந்து சாணி பவுடரை கரைத்துக் குடித்து விட்டார்.

இதில் மயங்கி விழுந்த அஜித்தை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவ-மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இது குறித்து கருப்பூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

X

Maalai Malar
www.maalaimalar.com