ஆத்தூர் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் பார் தீப்பிடித்து எரிந்தது

ஆத்தூர் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் பார் தீப்பிடித்து எரிந்ததில் பொருள் நாசமானது.
டாஸ்மாக் பாரில் பிடித்த தீயை   தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.
டாஸ்மாக் பாரில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு சொந்தமான இடம் மல்லியகரை கருத்தராஜபாளையத்தில் உள்ளது. 

அவர் அந்த இடத்தில் ஒரு கொட்டகை அமைத்துள்ளார். அதை டாஸ்மாக் பாருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.  இந்த நிலையில் நேற்று இரவு நள்ளிரவு திடீரென டாஸ்மாக் பார் தீப்பிடித்து எரிந்தது.  

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி  அணைத்தனர். அதற்குள் டாஸ்மாக் பார் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்து பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. 

இது குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது மது பிரியர்கள் யாராவது தீ வைத்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com