எடப்பாடியில் பள்ளிக்கு வந்த மாணவி திடீர் மாயம்

எடப்பாடியில் பள்ளிக்கு வந்த மாணவி திடீர் என்று மாயம்மானார்.
.
.
Published on

எடப்பாடி:

-

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி  எடப்பாடி பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவி சற்று நேரத்தில் தனது தோழிகளிடம் வெளியில் உள்ள கடையில் பேப்பர் வாங்கி வருவதாக கூறிச்சென்றுள்ளார். 

வெளியில் சென்ற மாணவி  நீண்ட நேரமாகியும் வகுப்பறைக்கு திரும்பாததை அறிந்த சக மாணவிகள் இதுகுறித்து வகுப்பு ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளியின் பல்வேறு பகுதிகளில் அவரை  தேடி பார்த்த ஆசிரியர்கள் அவர் பள்ளியில் இல்லாதது குறித்து அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். 

இதனை அடுத்து மாணவியை பல்வேறு இடங்களிலும் தேடிய அவரது பெற்றோர் பள்ளிக்கு வந்த தனது மகளை காணவில்லை என்றும், ஆத்தூர் கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணிமாறன் என்பவர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், காணாமல் போன தங்களது மகளை மீட்டு கொடுக்கும்படி எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவியை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com