பாம்பு பிடிக்கும் தொழிலாளியை பதம் பார்த்த பாம்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி

பாம்பு கடித்த தொழிலாளிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
.
.
Published on

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் தினேஷ் குமார் (வயது 30). பாம்பு பிடிக்கும் தொழிலாளியான இவருக்கு நேற்று இரவு சேலம் பள்ளப்பட்டி கொடிபள்ளம் பகுதியில் பாம்பு புகுந்த தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அந்த பாம்பை பிடிப்பதற்காக சென்றார். அப்போது தினேஷ்குமாரை பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

பாம்பு பிடிக்க வந்த நபரையே  பாம்பு பதம் பார்த்த சம்பவத்தை அறிந்து அந்த பகுதி மக்கள்  சோகம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com