அரசியல் பிரமுகர்கள் துப்பாக்கிகள் ஒப்படைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பால் அரசியல் பிரமுகர்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
.
.
Published on

சேலம்:

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் லைசன்ஸ் பெற்று 1377 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த துப்பாக்கிகளை வருகிற 31-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்றுவரை 148 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சேலம் மாநகரத்தில் மொத்தம் 560 துப்பாக்கிகள் லைசன்ஸ் பெற்று முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com