

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர் ஏற்காடு பகுதிகளில் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் லோசன தூறலுடன் சாரல் மழையோடு நின்று போனது.
மாவட்டத்தில் அ திக பட்சமாக ஆத்தூரில் 12 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.3, கெங்கவல்லி 3, வீரகனூர் 2, ஏற்காடு 2, ஆனைமடுவு 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 24.3 மி.மீ. மழை பெய்துள்ளது.