தாரமங்கலத்தில் நள்ளிரவில் லாரி வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது

தாரமங்கலத்தில் நள்ளிரவில் லாரி வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது நாசமானது.
வைக்கோல்போர் வைக்கப்பட்டிருந்த லாரியை படத்தில் காணலாம்.
வைக்கோல்போர் வைக்கப்பட்டிருந்த லாரியை படத்தில் காணலாம்.
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம் துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி.

இவருடைய மகன் செல்வம் என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் கால்நடைகளுக்கு விற்பனை செய்யப்படும் வைக்கோல் 189 கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்து தாரமங்கலம் சந்தைப்பேட்டையில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நள்ளிரவு  1 மணியளவில் லாரியில் திடீர் தீ பற்றியுள்ளது .இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஓமலூர் .மற்றும் நங்கவள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com