குளவிக்கு வைத்த தீ குடிசையை எரித்தது

எடப்பாடி அருகே குளவியை கலைக்க வைக்கபப்ட்ட தீயால் குடிசை எர்நிது சேதமானது.
தீ விபத்தில் எரிந்து சேதமான விவசாயி பாலனின் வீடு.
தீ விபத்தில் எரிந்து சேதமான விவசாயி பாலனின் வீடு.
Published on

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள எல்லைமடை கிழக்குக்கரை கால்வாய் பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 65). கூலித் தொழிலாளி. இவரது மனைவி குப்பாயி. இவர்களது குடிசை வீட்டின் ஒரு பகுதியில்,  குளவிகள் கூடு கட்டி இருந்தன.

பாலன் குளவிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக நீண்ட குச்சியில் துணிகளை சுற்றி அதில் மண் எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார். அதை குளவிக்கூடு கட்டியிருந்த பகுதியில் காட்டியுள்ளார்.

வெப்பம் தாங்காமல் கூட்டில் இருந்த குளவிகள் நாலாபுறமும் சிதறி ஓடின. அதில் சில குளவிகள் பாலனை கொட்டுவதற்காக பறந்து வந்தன. இதில் நிலை தடுமாறி பாலனின் கையிலிருந்த தீப்பந்தம் கூரையில் விழுந்து தீ பற்றியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது. 

இதில் வீடு முழுதும் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த எடப்பாடி தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் குடிசை எரிந்து சேதமானது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com