ஆத்தூர் நகராட்சி ஊழியர் மயங்கி விழுந்து சாவு

ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஆத்தூர் நகராட்சி ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
.
.
Published on

ஆத்தூர்: 

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஆத்தூர் நகராட்சியில் உதவியாளராக  பணிபுரிந்து வந்தார். இவர் இன்று காலை யில் ஓமலூரில் இருந்து ஆத்தூருக்கு பஸ்சில் வந்தார்.

 பஸ்சை விட்டு இறங்கி நகராட்சி அலுவலகத்துக்கு நடந்து சென்றார். வங்கி அருகே சென்றபோது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி அறிந்த ஆத்தூர் நகராட்சி ஊழியர் கள் விரைந்து சென்று வெங்கடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வெங்கடேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com