சேலம் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்த ரூ.4 ஆயிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த எலக்ட்ரீசியன்

சேலம் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்த ரூ.4ஆயிரத்தை நேர்மையுடன் போலீசாரிடம் எலக்ட்ரீசியன் ஒப்படைத்தார்.
ரூ.4 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த எலக்ட்ரீசியன்
ரூ.4 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த எலக்ட்ரீசியன்
Published on

சேலம்:

சேலம்  அய்யன் திருமாளிகை பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 32). எலக்ட்ரீசியனான இவர் நேற்று மாலை அஸ்தம்பட்டியில்  இருந்து கன்னங்குறிச்சி செல்லும் வழியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்த கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார்.

அங்கு ஏ.டி.எம் மெஷினில் ஏ.டி.எம் கார்டு சொருகினார். அப்போது உடனே 4 ஆயிரம் பணம் வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த பணத்தை யாராவது கேட்டு தேடி  வருகிறார்களா என்று எதிர்பார்த்து அங்கேயே சிறிது நேரம்  காத்திருந்தார்.

யாரும் வராததால் அந்த பணத்தை முத்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமாரிடம்  ஒப்படைத்தார். முத்துவின் மனிதநேயத்தை போலீசார் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com