

தாரமங்கலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம், இடங்கணசாலை பேரூரராட்சியாக இருந்து தாரமங்கலம் பேரூராட்சியை தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக அறிவித்து ஆணை பிறப்பித்தது தமிழக அரசு.
இதனை தொடர்ந்து நகராட்சிக்கு உண்டான அனைத்து மாற்றங்களையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்துள்ளது. அதன்படி ஒவ்வொன்றாக வாக்குச்சாவடி மறுவரையறை செய்து நகராட்சியில் மொத்தம் 30 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தாரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்த 18 வார்டுகளை தற்போது நகராட்சியில் 27 வார்டுகளாக உயர்த்தப் பட்டுள்ளது. மொத்தமுள்ள 27 வார்டுகளிலும் சேர்த்து இறுதியாக 24 ஆயிரத்து 868 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஆண் வாக்காளர்கள் 12,634 பேரும், பெண் வாக்காளர்கள் 12,343 பேரும் உள்ளனர். இதில் மூன்றாம் பாலினத்த வர்கள் ஒருவரும் கிடையாது .அதிகபட்சமாக 9 வது வார்டில் 1,626 வாக்காளர்களும், குறைந்த பட்ச வாக்காளர்களாக 7-வது வார்டில் 470 வாக்காளர்களும் களத்தில் உள்ளனர்.
புதிதாக தரம் உயர்த்தப் பட்ட இடங்கணசாலை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மொத்தம் 30 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது. நகராட்சி முழுவதும் 15 ஆயிரத்து 628 ஆண்கள், 14 ஆயிரத்து 607 பெண்கள், இதரர் 2 பேர் என மொத்தம் 30 ஆயிரத்து 237 வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சியாக உயர்த்தப் பட்ட பின்னர் முதன் முறையாக தாரமங்கலம், இடங்கணசாலை மக்கள் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கின்றனர். தலா 27 வார்டுகளிலும் உள்ள பிரபலமான அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைவர் பதவியை குறிவைத்து களம் இறங்க தயாராகி வருகிறார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. பிரமுகர்கள் கட்சி தலைமையிடம் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்து உள்ளனர். அவர்களை கட்சி மேலிடம் தீவிரமாக பரிசீலனை செய்து செய்து அறிவிக்க உள்ளது. வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் வார்டுகள் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் வெற்றிபெறும் கவுன்சிலர்களே தலைவரை தீர்மானிக்கிறார்கள். கவுன்சிலர்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க உள்ளது. இதனால் வார்டில் வெற்றிபெற ஒவ்வொருவரும் கடும் போட்டியை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.