எடப்பாடி பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச வழிபாடு

தைப்பூசத்தை முன்னிட்டு எடப்பாடி பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மலர் அலங்காரத்தில் காட்சியளித்த ஞானகந்த சுவாமிகள்.
மலர் அலங்காரத்தில் காட்சியளித்த ஞானகந்த சுவாமிகள்.
Published on

எடப்பாடி:

எடப்பாடியை  அடுத்த கள்ளபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஞான கந்தசாமி கோவிலில் கடந்த வாரம் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஞான கந்தசுவாமி சன்னிதானத்தில் மூலவருக்கு பால்,பன்னீர்,இளநீர்,சந்தனம்,திருநீர்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 108 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

அதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஞான கந்தசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் சுவாமிக்கு காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

எடப்பாடி அருள்ஞான பாலமுருகன் ஆலயம், கொங்கணாபுரம் வெள்ளக்கல் மலைமீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், க.புதூர் கந்தசாமி திருக்கோயில்.உள்ளிட்ட முருகப்பெருமான் ஆலயங்களிலும் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. 

X

Maalai Malar
www.maalaimalar.com