கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீரகனூர் அருகே பரபரப்பு கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது.
கொள்ளை நடந்த கூட்டுறவு சங்க செயலாளர் வீடு.
கொள்ளை நடந்த கூட்டுறவு சங்க செயலாளர் வீடு.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுமணி. இவர் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் செயலளாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. 

சம்பவத்தன்று வேலுமணி  அலுவலகத்திற்கு சென்று விட்டார். அவரது மனைவி சேலத்திற்கு சென்றிருந்தார். 

பின்பு இருவரும் மீண்டும் வீடு திரும்பிய பார்த்தபோது வீட்டின் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 சவரன் தங்க நகை, 45 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 3 ஜோடி வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகள் கொள்ளை போனது  தெரியவந்தது. 

இது குறித்து வீரகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள்  கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com