ஜவுளிக்கடை ஊழியர் மர்ம சாவு

சேலத்தில் ஜவுளிக்கடை ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
.
.
Published on

சேலம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 46).  இவர் சேலம்  கிச்சிப்பாளையத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று இரவு  பணி செய்த அவர் இன்று அதிகாலை பணியை முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது கடையில் இருந்து சற்று தூரம் சென்றதும் திடீரென மயங்கி சாலையில் விழுந்தார். 

இதனை பார்த்த  அந்த பகுதியினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு  கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக 

கூறினர். 

இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் சேலத்திற்கு கதறியபடி விரைந்தனர்.  இந்த சம்பவம்  குறித்து  கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com