உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி
Published on

ஆட்டையாம்பட்டி:

சேலம் அருகே கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

காலபைரவர் சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு   அருள்பாலித்தார்.  மேலும் உற்சவர் காலபைரவர் கோவில் வளாகத்தில்  வலம் வந்தது.

இதில் சேலம் குகை, நெய்க்காரப்பட்டி, அரியானூர், வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, சமத்துவபுரம், பூலாவரி உள்பட பல்வேறு பகுதிகளை  சேர்ந்த  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com