ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மோசடி-வாலிபர் கைது

சேலத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மோசடி செய்த வாலிபர் கைதானார்.
.
.
Published on

சேலம்,

சேலம் குகை மூங்கபாடி தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் முரளி (வயது 30). இவர் வெள்ளி தொழில் செய்து வருகிறார். 

வெள்ளிப் பொருட்களை செய்வதற்காக செவ்வாய்ப்பேட்டை நல்லதங்க தெருவைச் சேர்ந்த நாகராஜ் (வயது 35) என்பவரிடம் 10 கிலோ கழிவு வெள்ளி துகள்களை கொடுத்துள்ளார்.

ஆனால் நாகராஜ் வெள்ளிப் பொருட்களை செய்து தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து முரளி செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com