வெள்ளி தொழிலாளி ஆசிட் குடித்து தற்கொலை

சேலத்தில் வெள்ளி தொழிலாளி ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

சேலம்:

சேலம் பொன்னம் மாபேட்டை வாசகசாலை தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவர் வீட்டில் வைத்து வெள்ளி தொழில் செய்து வருகிறார். கொரோனா காரணமாக கடந்த 2 வருடமாக வெள்ளி தொழில் இல்லாமல் இருந்து வந்தார். 

இந்த நிலையில் கடத்த 3  மாதமாக வெள்ளி வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சரவணன் வெள்ளிக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்கொலை செய்த சரவணனுக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com