வாகன சோதனையில் சிக்கிய பட்டுப்புடவைகள்

ஓமலூரில் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் 139 பட்டுப்புடவைகள் பிடிபட்டன.
.
.
Published on

ஓமலூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,  வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கதேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்,  தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வஉசி நகரில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது  ஒரு காரில் விலை உயர்ந்த பனாரஸ் பட்டு புடவைகள் 149 இருந்தது. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் தாரமங்கலம் பகுதியில் இருந்து காடையாம்பட்டிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து புடவைகளை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள்,  ஓமலூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். அப்போது புடவைகளில் கல்பதித்தும் அழகுபடுத்தும் பணிக்காக எடுத்து சென்றதாக,  காரில் வந்தவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். 

அப்போது உரிய ஆவணங்களை கொடுத்து பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள்,  முறையாக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com