கொத்தாம்பாடியில் ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலய கும்பாபிசேகம்

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலய கும்பாபிசேகம் நடந்தது.
கும்பாபிசேகம் நடந்தபோது எடுத்த படம்.
கும்பாபிசேகம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில்  ஸ்ரீ சாய் ராகவேந்திரா ஆலயம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து கும்பாபிசேகம் நடந்தது.

முன்னதாக இதையொட்டி முகூர்த்த கால் நடப்பட்டு தீர்த்த குட ஊர்வலம் மற்றும் மஹாகணபதி ஹோமத்துடன் யாகசாலையில் பூஜைகள் தொடங்கி இரண்டாம் யாகசாலை பூஜை, ஜபம் ஹோமம் செய்யப்பட்டது.

 தொடர்ந்து புண்ணிய ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்ட பின்னர் புனிதநீரை அர்ச்சகர்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றி மஹாகும்பாபிக்ஷேகம் செய்தனர்.

 பின்னர் அருள்மிகு ஸ்ரீகணபதி, ஸ்ரீ சாய்பாபா, ஸ்ரீராகவேந்திரா ஆகிய மூர்த்திகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை தீபாராதனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com