பள்ளி மாணவி கடத்தல்: போக்சோவில் கைதான 2 பேர் சிறையில் அடைப்பு

பள்ளி மாணவி கடத்தல்: போக்சோவில் கைதான 2 பேர் சிறையில் அடைத்தனர்.
.
.
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகில் உள்ள கோணகப்பாடி கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியை அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 23) என்ற வாலிபர் கடத்தி சென்றுள்ளார். 

இது குறித்து மாணவியின் பெற்றோர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி  லோகநாதனை கைது செய்து, மாணவியை பத்திரமாக மீட்டனர். 

இந்த கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட லோகநாதனின்  நண்பர் மணி (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது. இதையடுத்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com