சேலம் உயிரியல் பூங்காவை 5 ஆயிரத்து 730 பேர் பார்த்து ரசித்தனர்

கடந்த 4 நாட்களில் மட்டும் சேலம் உயிரியல் பூங்காவை 5 ஆயிரத்து 730 பேர் பார்த்து ரசித்தனர்
.
.
Published on

சேலம்,

தமிழகத்தில் கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள பறவைகள், விலங்குகளை கண்டு ரசித்தனர். பேட்டரி கார் மூலமும் பலர் சுற்றி பார்த்தனர். மேலும் ஆங்காங்கு நின்று செல்பியும்  எடுத்து மகிழ்ந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தனர். 

இதில் கடந்த 14ந் தேதி 1250 பேரும், 15ந் தேதி 1450 பேரும், 16ந் தேதி 1330 பேரும், நேற்று 1700 பேரும் என மொத்தம் 4 நாட்களில் 5 ஆயிரத்து 730 பேர் பூங்காவை பார்த்து ரசித்ததாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com