குழந்தைகளுடன் வாலிபர் மாயம்

சேலத்தில் குழந்தைகளுடன் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
.
.
Published on

சேலம்

சேலம் அருகே உள்ள மாமாங்கம் அடுத்த ஜாகிர் ரெட்டிப்பட்டி குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). இவரது மனைவி மணிமேகலை  (27) இந்த தம்பதிகளுக்கு ரோஹித் (10)முகேஷ் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் .

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே  ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு மாதமாக மணிமேகலை அழகாகபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி தனது 2 மகன்களுடன் மனைவியை பார்க்க வந்த சீனிவாசன் குழந்தைகளுடன் திடீரென மாயமானார் . 

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமேகலை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து மாயமான சீனிவாசன் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com