சேலம் ரெயில்வே கோட்ட ஊழியர்கள் பதக்கம் வென்றனர்

அகில இந்திய ரெயில்வே தடகள போட்டி: சேலம் ரெயில்வே கோட்ட ஊழியர்கள் பதக்கம் வென்றனர்
கோட்ட மேலாளரிடம் வாழ்த்து பெற்ற ஊழியர்கள்.
கோட்ட மேலாளரிடம் வாழ்த்து பெற்ற ஊழியர்கள்.
Published on

சேலம், ஏப்.9

86வது அகில இந்திய ரெயில்வே தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொல்கத்தாவில் கடந்த மாதம் நடைபெற்றது. இதையொட்டி தென்னக ரெயில்வே, சேலம் ரெயில்வே கோட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றனர்.

இதில் கோவையில் தலைமை வணிக எழுத்தராகப் பணியாற்றும் சரஸ்வதி ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றார். 

இதேபோல் கோவையில் வணிக எழுத்தராக பணி புரியும் சிவா அன்பரசி 4 ஙீ 400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றார்.

கோவையில் வணிக எழுத்தராக பணிபுரியும் கமல்ராஜ் டிரிபிள் ஜம்ப்பில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றார், ஈரோடு ரெயில்வே அலுவலகத்தில் பணிபுரியும் தங்கராசு டெகாத்லான் போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார்.

இதேபோல் ஈரோடு வணிக பிரிவில் எழுத்தராக பணி புரியும் பிரவீன் குமார் 4 ஙீ 400  தடை தாண்டும் ஓட்ட பந்தய த்தில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றார்.

 போட்டியில் வெற்றி பெற்ற அனைவரும் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்துக்கு வந்தனர். கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸை சந்தித்து அவர்கள் வாழ்த்து பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com