சேலம் சிறை கைதிக்கு மூச்சுத் திணறல்

சிறை கைதிக்கு இன்று காலை திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எஸ். பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவரை கடந்த 2016-ம் ஆண்டு ஓமலூர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

சிறையிலிருந்த முருகனுக்கு இன்று காலை திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சிறைக்காவலர்கள் சிறையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com