வனவாசி அருகே ரூ.4 லட்சம் பட்டு சேலைகள் பறிமுதல்

வனவாசி அருகே ரூ.4 லட்சம் பட்டு சேலைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
.
.
Published on

மேச்சேரி:

நங்கவள்ளி அருகே வனவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் துணை தாசில்தார் லதா அஞ்சலி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் 55 பட்டு சேலைகள் இருந்தன.

இது குறித்து கார் டிரைவர் அங்குராஜ் என்பவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் வனவாசியில் ஒரு கடையில் பட்டு சேலைகளை வாங்கிக்கொண்டு, குமாரபாளையத்தில் உள்ள கடைக்கு வாங்கி செல்வதாக தெரிவித்தார்.

ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள அந்த பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com