3 பெண்களிடம் ஆன்லைனில் ரூ.2 லட்சம் மோசடி

3 பெண்களிடம் ஆன்லைனில் ரூ.2 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
.
.
Published on

சேலம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் சசிகுமார் கொண்டையன் (வயது 46), இவர் பெங்களூரில் ேவலை வாங்கி  தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தார். 

இதனை   நம்பிய தாதாகப்பட்டியை சேர்ந்த பெண் உள்பட  3 பேர் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்தை அவர் கூறிய வங்கி கணக்கில்  அனுப்பினர். 

ஆனால் அவர் கூறிய படி  வேலை வாங்கி  கொடுக்கவில்லை. மேலும் கொரோனாவை காட்டி காலம் தாழ்த்தி வந்தார்.    இதனால் அதிர்ச்சி அடைந்த   அந்த பெண்    சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். 

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் தலைமறைவாக இருந்த   சசிகுமார்  கொண்டயனை  பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com