தனியார் ஆலையில் வடமாநில வாலிபர் தவறி விழுந்து சாவு

தனியார் ஆலையில் மேற்கூரையை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார்.
.
.
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் மணியனூர் நாட்டாமங்கலம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது டேக்கா என்பவரது மகன் முகமது நவுசத் (வயது 23) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆலையில் பராமரிப்பு பணியின் போது பழுதடைந்த பழைய மேற்கூரையை மாற்றி புதிய மேற்கூரை அமைக்கும் பணியில் முகமது நவுசத் மற்றும் சக தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மேற்கூரையின் மீது அமர்ந்து இருந்த முகமது நவுசத் திடீரென்று ேமலே இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com