ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம் வருவாய் துறையினர் நடவடிக்கை

காடையாம்பட்டி அருகே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றி வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
.
.
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் செக்காரப்பட்டி கிராமம் பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தை அந்த பகுதியில் உள்ள நபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக காடையாம் பட்டி வட்டாட்சியர் அருள்பிரகாசுக்கு  தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் செக்காரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சித்தரா சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  

இதில் அந்த பகுதியை சேர்ந்த சடைய கவுண்டர் மகன் சின்னத்தம்பி 7 சென்ட் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது. 

உடனடியாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com