கொளத்தூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கொளத்தூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
மேட்டூர் தாசில்தார் பானு முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது எடுத்த படம்.
மேட்டூர் தாசில்தார் பானு முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது எடுத்த படம்.
Published on

மேட்டூர்:

மேட்டூர் தாலுகா கொளத்தூர் அடுத்த சிங்கிரி பட்டி ஊராட்சிக்குட்பட்ட தண்டா 4 ரோடு பகுதியில் எஸ்.சி, எஸ்.டி மாணவியர் விடுதி உள்ளது. அங்கு உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் செல்வி என்பவர் குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை ஆட்சியாளர் சரளா, மேட்டூர் தாசில்தார் பானு ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது. 

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது குடிசை அமைத்து இருந்த செல்வி வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் செல்ல முன்வராததால் வீட்டிலிருந்த பொருட்கள் மேட்டூர் தாசில்தார் பானு முன்னிலையில் பட்டியலிடப்பட்டு தாசில்தார் அவருடைய பொறுப்பில் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார். 

ஆக்கிரமிப்பு அகற்றியதான் காரணமாக கொளத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com