மகுடஞ்சாவடி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய 2 வீடுகள் அகற்றம்

மகுடஞ்சாவடி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகள் அகற்றப்பட்டது.
.
.
Published on

மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள  வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகன் காவிரி. இவர் அரசுக்கு சொந்த மான நல்ல தண்ணீர் குட்டை புறம்போக்கு நிலத்தில் 2 சென்ட் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டினார். 

இதுபோல் அதே பகுதியை சேர்ந்த  கந்தசாமி மகன் சின்ன பையன் என்பவர் அரசுக்கு சொந்தமான 2 சென்ட்  நிலத்தில் வீடு கட்டினார். இது பற்றி அறிந்த  சங்ககிரி வட்டாட்சியர்  பானுமதி  தலைமையில் அதிகாரிகள்  அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு அரசு நிலத்தை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com