வாழப்பாடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

போக்குவரத்து நெரிசல் அதிகமாவதால் வாழப்பாடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி ரெயில்வே கேட் மூடப்பட்டதால் தேங்கி நிற்கும் வாகனங்கள்.
வாழப்பாடி ரெயில்வே கேட் மூடப்பட்டதால் தேங்கி நிற்கும் வாகனங்கள்.
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி போலீஸ் நிலையம் அருகே, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட கிராமங்களை வாழப்பாடி யுடன் இணைக்கும் தம்மம் பட்டி சாலையில், சேலம்- விருத்தாச்சலம் அகல ரெயில் பாதை குறுக்கிடுகிறது.

இந்த வழித்தடம் அண்மை யில் மின் வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், இரு மார்க்கத்திலும் பயணிகள் ரெயில்கள், விரைவு ரெயில்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில்வே கேட் பகுதியிலேயே ரெயில் நிறுத்தமும் செயல்பட்டு வருகிறது.

இதனால், ரெயில் கடந்து செல்வதற்காக தம்மம்பட்டி சாலை அடிக்கடி மூடப்படு வதால், இருபுறம் நீண்ட தூரத்திற்கு ஏராளமான வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இந்த வாகனங்க ளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாழப்பாடி பகுதி பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி யர், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளும் தினந்தோறும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ரெயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில், தம்மம்பட்டி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க, சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கவுதமசிகாமணி ஆகியோருக்கு பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com