போலீசார் சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

போலீசார் சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
.
.
Published on

அன்னதானப்பட்டி:

 சேலம் மாநகர காவல் துறை (தெற்கு) சார்பில்  பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. 

இதில் சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, இரும்பாலை, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளுக்குட்பட்ட  பகுதிகளில் இருந்து  தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுக்கள்  மற்றும் மாவட்ட கலெக்டருக்கு  அனுப்பிய மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது விசாரணை நடைபெற்றது. 

இதில் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் அசோகன், டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன்,  நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் சந்திரகலா, கணேசன், ஜெய்சல்குமார், பழனியம்மாள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com