பேளூரில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

பேளூரில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல் வழங்கப்பட்டது.
ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா நடந்தபோது எடுத்த படம்.
ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா நடந்தபோது எடுத்த படம்.
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஊட்டச்சத்து குறைபாடுடைய கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஏகம் பவுண்டேஷன் தன்னார்வ இயக்கம் சார்பில் ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு, பேரிச்சை, நிலக்கடலை, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் கொண்ட ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். 

ஊட்டச்சத்து பொருட் களை கர்ப்பிணிப் பெண்கள் தேவையான அளவில் உட்கொண்டு, ஆரோக்கியமான அறிவுத் திறன் மிகுந்த குழந்தைகளை, சுகப்பிரசவமாக பெற்றெ டுக்க தனக்குத் தானே உறுதி கொள்ள வேண்டுமென, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மருத்துவக் குழுவினர் அறிவுரை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com