போக்சோ வழக்கில் ஆஜராகாத பெண் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

போக்சோ வழக்கில் ஆஜராகாத பெண் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
.
.
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி  வந்தவர் வளர்மதி. இவர் கடந்த 2019 &ம் ஆண்டு போக்சோ வழக்கில் ஒரு வாலிபரை கைது செய்து சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் போக்சோ  கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக இன்ஸ்பெக்டர் வளர்மதிக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனைத்தொடர்ந்து  நேற்று நீதிபதி முருகானந்தம், இன்ஸ்பெக்டர் வளர்மதிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

தற்போது இன்ஸ்பெக்டர் வளர்மதி நீலகிரி மாவட்டம் தேவாலா போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com