மக்கள் குறை தீர்க்கும் முகாம்

சேலம் மாநகரம் சூரமங்கலம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
.
.
Published on

சேலம்:

சேலம் மாநகரம் சூரமங்கலம் சரகத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி, சூரமங்கலம், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே புகார் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நடத்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று.

இதில் சேலம் மாநகர அம்மாபேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சரவண குமார் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் சொத்து தகராறு, பணம் கொடுக்கல் வாங்கல், குடும்பத்தகராறு உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையை சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் நடத்தினர், இதில் விசாரிக்கப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டது.

 இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com